பிரான்ஸின் மருந்தாய்வு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான சனோஃபி நிறுவனம், உலக நாடுகளின் தேவைக்காக அமெரிக்காவில் கொரோனத் தடுப்பூசிகளைத் தயாரிக்க உள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் உள்ள ரிட்ஜ்ஃபீல்ட் தளத்தில் மொடேர்னா தடுப்பூசிகளை சனோஃபி நிறுவனம், தயாரிக்க உள்ளது.
முதற்கட்டமாக 200 மில்லியன் தடுப்பூசி அளவுகளைத் தயாரிக்கும் ஆணையை சனோஃபி நிறுவனம் பெற்றுள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து சனோஃபி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆரம்பாமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்கா தனது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 மில்லியன் டோஸ் வரை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.