பிரித்தானியாவில் பரவும் பி.1.1.1 என்ற உருதிரிபடைந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மேலும் சிலர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காலி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் நேற்று அறிவித்திருந்தார்.
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து இந்த விடயம் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.