ஐ.பி.எல். ரி-20 தொடரின் 23ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மணிஷ் பாண்டே 61 ஓட்டங்களையும் வோர்னர் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ருத்துராஜ் கெய்க்வாட் 75 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 44 பந்துகளில் 12 பவுண்ரிகள் அடங்களாக 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவுசெய்யப்பட்டார்.