அமெரிக்காவின் பைஸர் மருந்த தயாரிப்பு நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜுலையில் ஒன்பது இலட்சம் பைஸர் (pfizer) கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள அந்த நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளதாக மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும் 4.9 மில்லியன் பைஸர் கொரோனா தடுப்பூசிகளை எதிர்வரும் ஒக்டோபரில் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பைசர் தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.