ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோவிற்கு கிழக்கே 820 கி.மீ (510 மைல்) தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த தாக்குதலில் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து உடனடியாக எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், 17 வயது சிறுவன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, இரண்டாவது தாக்குதாரிக்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கசான் நகரம் முக்கியமாக முஸ்லீம் குடியரசான டாடர்ஸ்தானில் உள்ளது.
சம்பவ இடத்திற்கு அதிக ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் அவசர வாகனங்கள் பாடசாலை வளாகத்திற்குள் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதை அங்கிருந்து நேரடியாக வெளியாகும் காணொளிகளில் அவதானிக்க முடிகின்றது.
மேலும், சில சிறுவர்கள் தப்பிக்க ஜன்னல்களிலிருந்து குதித்தும், காயமடைந்தவர்கள் வெளியேற்றப்படுவதையும் அந்தக் காணொளி காட்டுகின்றது.