இஸ்லாமியர்கள் விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடுகின்ற முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,