இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் புதிதாக தொற்று உள்ளாகியுள்ளனர். இது கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குறைவாகும்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 49 இலட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 11 இலட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 35 இலட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 74 ஆயிரத்தை கடந்துள்ளது.