குஜராத் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
குறித்த மாநிலத்தின் ராஜ்கோட் நகரின் தெற்கு பகுதியில் 182 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 3.8 என்ற ரிக்டர் அளவில் பதிவான குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.