நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 16இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் நெதர்லாந்தில் கொவிட் தொற்றினால் 16இலட்சத்து 993பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில் இதுவரை 17ஆயிரத்து 456பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 829பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 658பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 673பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 13இலட்சத்து 77ஆயிரத்து 879பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.