ராதே திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், திருட்டு இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக குறித்த படத்தை 249 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்குமாறும், திருட்டு இணையத்தளங்களில் பார்ப்பவர்கள் மீது சைபர் கிரைம் பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.