இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முயன்று வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரின் ஜூன் பியரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதுகுறித்து எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.
இதன்போது, விரைவில் மிகவும் குறிப்பிடத்தக்க படைக்குறைப்பை ஜோ பைடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்ததாக ஜூன் பியரி மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே இராணுவத் தலைமையகத்திற்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு தமது இலக்கை எட்டும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், யூத எதிர்ப்புப் பேச்சுகளை துருக்கி ஜனாதிபதி தவிர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் நெட் பிரைஸ் வலியுறுத்தியுள்ளார்.