பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) காக்னி (சீன்-செயிண்ட்-டெனிஸ்) நகரில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இதன்படி, இம்மாதம் 31ஆம் திகதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என உறுதியளித்தார்.
முன்னதாக ஜூன் 15ஆம் திகதியில் இருந்து தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ‘நாம் ஒரு தடுப்பூசியையேனும் வீணடிக்கக்கூடாது. தடுப்பூசி போடும் பணி மீண்டும் வேகமெடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.