மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றமையினால் சில நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் அதன் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆகவே மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழே காணப்படுகின்ற ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கெனியன் விமல சுரேந்திர, நவ லக்ஷபான, லக்ஷபான ஆகிய நீர்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனுடைய சில வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.