யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிகாட்டுவான் – நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த சிப்பாய் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதனையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், புங்குடுதீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.