இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 886 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 71 இலட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 43 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 25 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 11 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.