கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, அவர்களில் இந்திய பிரஜையான ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், இது இந்திய திரிபு வைரஸா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.