இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 73 இலட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 46 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 24 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 842 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 15 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது.