மன்னார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது.
இந்த விடையம் தொடர்பாக மன்னார் மின்சார சபையின் 023-2222150 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போதும், வட மாகாணத்திற்கு பொறுப்பான யாழ்.அலுவலகத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 021-2024444 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தமது முறைப்பாட்டை தெரிவிக்குமாறு தெரிவிக்கின்றனர்.
எனினும் மன்னாரில் இருந்து பல தடவைகள் குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினாலும், குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என மன்னாரில் பாதிக்கப்பட்ட மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மின்சார சபையில் கடமையாற்றும் பலர் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் விடுமுறையில் சென்றுள்ளமை காரணமாக, உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.