சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் இதனுடாக சுத்திகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நாளாந்தம் 45 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்க கூடியவாறு புதுப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த செயற்திட்டங்களுக்கும் 600 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.