வட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக கொவாக்ஷின் (Covaxin) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரையில் கலப்பு தடுப்பூசிகளுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்ற நிலையில், இந்த விடயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும் குறித்த 20 பேரும் உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இது குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.