ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை 41 வயதிற்குட்பட்டவர்களுக்கு போடுவதை நிறுத்தியதாக பெல்ஜியம் தெரிவித்துள்ளது.
கடுமையான பக்க விளைவுகளினால், ஐரோப்பாவில் முதல் மரணத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடம் அவசர அறிவுரை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடுப்பூசியை மீண்டும் போடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்னொருவருக்கு இரத்தம் உறைதல், இரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,052,652பேர் பாதிக்கப்பட்டதோடு 24,889பேர் உயிரிழந்துள்ளனர்.