கொழும்பு – கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த நபர், கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.