யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோமீற்றருக்கு தெற்கே பகானகா அருகில் கரையை கடந்தது.
இந்நிலையில் புயல் காரணமாக மணிக்கு 130 கி.மீ முதல் 140 கி.மீ வரை காற்று வீசியது. இதனால் 10 இற்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. சுமார் 3 இலட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.