நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய தபால் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதற்கமைய மன்னாரில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான அத்தியாவசிய தபால் சேவைகள் 2 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் மன்னார் அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக, முதியோர் கொடுப்பனவு மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஆகியன வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சேவையானது, கிழமை நாட்களில் காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரை இடம்பெறும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.