ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்து 79 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனையடுத்து மேலதிகமாக ஒரு கோடியே 80 இலட்சம் டோஸ்கள் கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 இலட்சம் தடுப்பூசிகள் மே மாதத்தில் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அவற்றுள் பெரும்பாலானவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே மேலதிகமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.