வடக்கில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மாம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய திருநெல்வேலி மேற்கு ஜே – 110 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே இவர்கள் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில், சிவன் அம்மன் வீதியில் அமைந்துள்ள குறித்த கிராம சேவையாளர் அலுவலகத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்
இதேவேளை திருநெல்வேலி வடக்கு ஜே – 114 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டவர்கள், எதிர்வரும் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில், முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.