நாட்டு மக்களுக்கு தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தண்ணீர் கட்டணத்தை செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.