இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்கு வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், மற்றும் உண்மை ஆவணங்கள் வாயிலாக தீர்வு காணப்படும்.
எங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்கள் காரணமாக சில பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன.
அவற்றுக்கு தீர்வு காணப்பட்டதுடன், எதிர்கால இலக்கை நோக்கி, நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கிறோம். அண்டை நாடுகள், தங்கள் அன்பையும், பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.