நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் இன்று மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவானஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.