இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், தற்போது டெல்டா-பிளஸ் வைரஸாக உருமாற்றம் அடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா, தனது ருவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, “டெல்டா வகை வைரஸில் இருந்து இந்த புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது.
எனினும் இந்தியாவில், இந்த டெல்டா-பிளஸ் வகை வைரஸ் அதிக அளவில் பரவவில்லை. ஆகையினால் தற்போது இதனால் ஆபதில்லை.
இதேவேளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளிலும் இந்த வகை உருமாற்றம் காணப்படுகின்றது.