கிளிநொச்சி புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையைக் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் நேற்று காணாமல் போயுள்ளார். நேற்று பிற்பகல் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரமாக தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் அருமைநாதன் (வயது 40) என தெரியவந்துள்ளது.