ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகள் மீண்டும் கூடவுள்ளனர்.
வியன்னாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டனும் தெஹ்ரானும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஈரானும் ஆறு உலக வல்லரசு நாடுகளும் ஏப்ரல் மாதம் முதல் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2018 இல் விலகிய நிலையில் ஈரான் மீது பல வெளிநாடுகள் தடைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.