சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப் போக்குவரத்தை நடத்தியதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
மேலும் தாய்வான் நீரிணை வழியான போக்குவரத்து ஒரு இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இருப்பினும் அமெரிக்கா வேண்டுமென்றே அதே பழைய தந்திரங்களை கையாள்வதாகவும் தாய்வான் நீரிணையில் சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை உறுதியாக எதிர்ப்பதாகவும் பிராந்திய பாதுகாப்பிற்கான அபாயங்களை அமெரிக்காவே உருவாக்குக்கின்றது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.