கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து ஹொங்கொங்கின் முதல் வழக்கு இன்று புதன்கிழமை நடுவர் (ஜூரி) இல்லாமல் விசாரணையை தொடங்கியது.
பயங்கரவாதத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 24 வயதான டோங் யிங்-கிட் என்ற இளைஞன் குறித்தே இந்த விசாரணை இடம்பெற்றது.
விடுதலை கோரும் பதாகையை பறக்கவிட்டத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீனா, கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தை, ஹொங்கொங்கில் அமுல்படுத்திருந்தது.
இந்த கட்டுப்பாடுகள் கருத்து சுதந்திரத்தை முடக்கும் அதேவேளை நாட்டில் சுயாட்சியை அகற்றும் நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இந்த சட்டம் சர்வதேச அளவில் பரவலாக விமர்சிக்கப்பட்டாலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர தேவைப்பட்டது என பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.