செப்டம்பர் மாதம் முதல் 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிப் போடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
கடந்த ஜுன் மாதம் ஏழாம் திகதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம் பைசர் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கவுள்ள நிலையில், அந்த தடுப்பூசியும் குழந்தைகளுக்கு செலுத்தக்கூடியதாக இருக்கும் என ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.