வேல்ஸின் மூன்றாவது கொவிட் அலை பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கிறது என, வடக்கு வேல்ஸில் உள்ள டாக்டர் டிஃபான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாறுபாடு வேல்ஸில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில், இது கிட்டத்தட்ட பிரத்தியேகமாக இளைஞர்களை பாதிக்கிறது என அவர் விபரித்துள்ளார்.
வேல்ஸில் வாராந்திர தொற்று வீதம் மார்ச் மாதத்திலிருந்து மிக உச்ச அளவை தொட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரிக்குமா என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தநிலையில், 100,000 மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 100 தொற்றுகள் என ஃபிளின்ட்ஷயர் மிக உயர்ந்த கொவிட் வீதத்தை கொண்டுள்ளது.
கான்வி மற்றும் டென்பிக்ஷைர் ஆகியவை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது முறையே 88.7 சதவீதம் மற்றும் 72.1 சதவீதமாக உள்ளன.
மிகக் குறைந்த தொற்று வீதம் உள்ள பகுதிகளாக, மெர்திர் டைட்ஃபில் (6.6 சதவீதம்), ரோண்ட்டா சைனான் டாஃப் (12 சதவீதம்) மற்றும் பிளேனா க்வென்ட் (12.9 சதவீதம்) உள்ளன.