பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அகதிகளுக்கு ஆதரவாக நூதன முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (வியாழக்கிழமை) பரிஸ் நகரசபைக்கு முன்பாக, அகதிகளுக்கான தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய கோரி சுமார் 250 கூடாரங்கள் அமைக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீடற்ற அகதிகள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த முகாமினை அமைத்திருந்தனர்.
போராட்டத்தை முன்னெடுத்த தொண்டு நிறுவங்களின் ஒன்றான Utopia 56 நிறுவனம், ‘கண்ணியமான மற்றும் நீண்டகால தங்குமிட தீர்வுகளை நாம் எதிர்பார்க்கின்றோம்!’ என தெரிவித்துள்ளது.
பின்னர், பொலிஸார் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு, கூடாரங்களை அகற்றி அங்கிருந்த அகதிகளை வெளியேற்றினர்.