தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக நாளை கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜுன் மாதம் 28,29 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் வடக்கு உள் மாவட்டங்களிலும் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.