நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நிராகரிக்கவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவசம் இதனை தெரிவித்தார்.
மேலும் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு இடமளிக்கும் வகையில் பல தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு திறமையான நபரை தங்கள் தொடர்ந்தும் வரவேற்போம் என்றும் சாகர கரியவசம் தெரிவித்தார்.