இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 699 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 94 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 5 இலட்சத்து 43 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 816 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்தை கடந்துள்ளது.