கொரோனா காலத்தில் கிரேட்டர் மன்செஸ்டரின் ஏற்பட்ட இறப்பு விகிதம் இங்கிலாந்தின் மற்ற பகுதிகளை விட 25% அதிகமாக காணப்படுவதாக புதிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
மேலும் இங்கிலாந்தை விட வடமேற்கு இங்கிலாந்தில் ஆயுட்காலம் ஒட்டுமொத்தமாக 2020 ஆம் ஆண்டில் குறைந்துவிட்டது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டரின் மக்கள் தொகையின் ஆரோக்கியத்தை கட்டியெழுப்பும் வகையில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் சர் மைக்கேல் மர்மோட் தலைமையில் சுகாதார அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.
குறித்த அமைப்பின் அறிக்கையில், 2021 மார்ச் முதல் இந்த நகரம் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தை விட 25% அதிக கொரோனா இறப்பு விகிதத்தை காட்டுகின்றது.
இதன்படி 2020 ஆம் ஆண்டில் சராசரி ஆயுட்காலத்தில் இருந்து ஆண்களுக்கு 1.6 ஆண்டுகளும் பெண்களுக்கு 1.2 ஆண்டுகளும் குறைந்துள்ளது.