தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 45 ஆயிரத்து 935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.