இந்தோனேசியா தனது பிரதான தீவான ஜாவாவையும், பாலியின் சுற்றுலாத் தலத்தையும் முடக்குவதாக அறிவித்துள்ளது.
நாடு தொற்றுப்பரவல் மற்றும் கொவிட் தொற்றுகளில் ஆபத்தான அதிகரிப்பை கண்டுவரும் நிலையில், ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தோனேசியா சமீபத்தில் இரண்டு மில்லியன் கொவிட் தொற்றுகளை பதிவு செய்தது.
விடுமுறை பயணம் மற்றும் டெல்டா மாறுபாடு காரணமாக இந்த எண்ணிக்கை உயர்ந்தது.
முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறைந்தது இரண்டு வாரங்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் விபரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி புதன்கிழமை இந்தோனேசியாவில் 20,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளும் 467 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜகார்த்தாவுக்கு வெளியே கொவிட் சோதனை போதுமானதாக இல்லாததால், தொற்று எண்கள் மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.