• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நான்காவது ரி-20: மீண்டும் மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா!

நான்காவது ரி-20: மீண்டும் மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா!

Anoj by Anoj
2021/07/02
in கிரிக்கெட், விளையாட்டு
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

கிரெனடா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமோன்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், டப்ரைஸ் சம்ஸி மற்றும் ஜோர்ஸ் லிண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நோட்ஜே மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 168 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 60 ஓட்டங்களையும் ஹெய்டன் மார்கிரம் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளையும் ஆந்ரே ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் கெய்ல், ஒபேட் மெக்கொய் மற்றும் கெய்ரன் பொலார்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 25 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 1 விக்கெட்டினையும் சாய்த்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிய்ரன் பொலார்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான தீர்க்கமான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: கிய்ரன் பொலார்ட்தென்னாபிரிக்கா அணிமேற்கிந்திய தீவுகள் அணிரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை  – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை!

Next Post

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘இறப்பர் சீல்’ ஆக மாற்றப்பட்டுள்ளனர் – தயாசிறி!

Related Posts

ரிஷப் பண்டுக்கு  24 இலட்சம் ரூபாய் அபராதம்!
கிரிக்கெட்

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம்!

2025-04-29
35 பந்துகளில் சதம்; ஐ.பி.எல். அரங்கில் 14 வயது சிறுவன் சாதனை!
ஆசிரியர் தெரிவு

35 பந்துகளில் சதம்; ஐ.பி.எல். அரங்கில் 14 வயது சிறுவன் சாதனை!

2025-04-29
IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-04-28
பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!
உதைப்பந்தாட்டம்

பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!

2025-04-28
IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்!

2025-04-28
‍IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!
கிரிக்கெட்

‍IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!

2025-04-27
Next Post
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘இறப்பர் சீல்’ ஆக மாற்றப்பட்டுள்ளனர் – தயாசிறி!

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘இறப்பர் சீல்’ ஆக மாற்றப்பட்டுள்ளனர் - தயாசிறி!

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

0
2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

0
பொருளாதார கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

பொருளாதார கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

0
2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள்  மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
வேட்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை

இன்றுடன் நிறைவடையும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்!

0
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

2025-04-29
2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

2025-04-29
பொருளாதார கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

பொருளாதார கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

2025-04-29
2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள்  மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-04-29
இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிய பிரிவு!

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிய பிரிவு!

2025-04-29

Recent News

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

2025-04-29
2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

2025-04-29
பொருளாதார கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

பொருளாதார கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

2025-04-29
2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள்  மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.