தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘இறப்பர் சீல்’ ஆக மாற்றப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
‘நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை இனங்காணாது, அமைச்சுப் பொறுப்புகளை பிரித்து கொண்டுப்பதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது.
நாடாளுமன்றத்திற்கு யார் வந்தாலும், யாருக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் பிரச்சினை அவ்வாறே இருக்கும்.
அமைச்சர்களை விடவும் ஆகக் கூடுதலான அதிகாரங்களை கொண்டிருந்த தலைவராகவே பசில் ராஜபக்ஷ இருந்தார்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.