53 வயதான ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்தார்.
பிரின்ஸில் உள்ள ஜனாதிபதியின் வீட்டில் அடையாளம் தெரியாத குழுவினரால் இன்று புதன்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் முதல் பெண்மணி மார்ட்டின் மோஸும் காயமடைந்தார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டார் என்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.