தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனிடம் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும்பான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
இத்தகைய மக்களுக்கு, தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
அந்தவகையில் மஸ்கெலியாவில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஊடாக ப.தவபாலன் வழங்கியிருந்தார்.
குறித்த செயற்பாட்டுக்கே பொலிஸாரினால் அழைப்பானை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ப. தவபாலன் வெளியில் சென்றிருந்த வேளையில் அவரது வீட்டிற்கு வருகை தந்த பொலிஸார், சிங்கள மொழியில் எழுதப்பட்ட அழைப்பானையினை வழங்கிவிட்டு, எதிர்வரும் 12.07.2021 காலை, 9.30 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருகைத் தருமாறு கூறிச்சென்றுள்ளனர்.