இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (புதன்கிழமை) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றே புனித ஹஜ் பெருநாளாகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் துல்ஹஜ் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய 21ம் திகதி அதாவது இன்றைய தினம் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.