ஆர்ப்பாட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலையடுத்து, கொழும்பு – காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை பகுதியின் பல்வேறு வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (வியாழக்கிழமை) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமான சென்றதால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.