வேல்ஸில் 40 வயதிற்குட்பட்டவர்களில் கால் பகுதியினர், இன்னும் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து தடுப்பூசிகளிலும் 92 சதவீதத்துக்கும் அதிகமானவை இரண்டாவது அளவுகளாக இருந்தன என பொது சுகாதார வேல்ஸ் தரவு காட்டுகிறது.
சமீபத்திய வாரத்தில் சுமார் 7,000 முதல் டோஸ் அளவுகள் வழங்கப்பட்டன.
ஆனால், 18 முதல் 39 வயதிற்குட்பட்ட 227,551பேர் இன்னும் முதல் டோஸை செலுத்தவில்லை. இதில் 18 முதல் 29 வயதுடையவர்களில் 25.9 சதவீதம் பேர் உள்ளனர். இதில் 24,600க்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள்.
பெரும்பாலான சுகாதார சபைகள் இளையவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை எளிதாக்குவதற்காக நடமாடும் சேவைகளை வழங்கி வருகின்றன.